கைதி 2 விரைவில் டீசருடன் அறிவிப்பு
பிப் 20, 2026
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடித்து 2019ல் வெளியான படம் "கைதி". ஒரு மாறுபட்ட படமாக அமைந்து ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பெரிதும் பேசப்பட்டது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கடந்த சில வருடங்களாகவே ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அடுத்தடுத்து விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் பயணித்தார் லோகேஷ். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை அவர் இயக்கும் அறிவிப்பும் வெளிவந்தது. "கைதி 2" அவ்வளவுதானா என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தார்கள்.
அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து "கைதி 2" படம் நிச்சயம் வரும் என்று அறிவித்தார் லோகேஷ். அல்லு அர்ஜுன் படத்தை முடித்த பிறகு "கைதி 2" படத்தை அவர் ஆரம்பிக்க உள்ளார்.
இதனிடையே, "கைதி" படத்தில் கார்த்தியின் கதாபாத்திரமான "டில்லி" என்ற பெயரில் ஒரு டீசருக்கு தயாரிப்பு நிறுவனம் சென்சார் சான்றிதழ் வாங்கியுள்ளது. அது "கைதி 2" படத்திற்காக இருக்கலாம் என்றும், விரைவில் அறிவிப்புடன் கூடிய அந்த டீசர் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!