
மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்!
அக் 26, 2025
Advertisement
நடிகர் தனுஷ் தற்போது ‛போர் தொழில்" பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இது தனுஷின் 54வது படமாக உருவாகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ் மற்றும் மலையாள நடிகர்கள் ஜெயராம், சுராஜ் வென்ஜரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடந்த மூன்று மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை, ராமநாதபுரத்தில் படமாக்கி வந்தனர். இந்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார், தனுஷூக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தனுஷூக்கு, அப்பாவாக கே.எஸ். ரவிக்குமார் "தங்கமகன்" படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் மமிதா பைஜூ கிராமத்து இளம் பெண்ணாக நடித்து வருகிறார். குறிப்பாக ராம்நாடு தமிழ் வட்டார வழக்கை மமிதா பைஜூஅழகாக பேசுகிறார் என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!