உடல் நலம் தேறி வருகிறார் ஜெர்மி ரென்னர்
ஜன 05, 2023
Advertisement
ஹாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெர்மி ரென்னர். அவென்ஜர்ஸ் கேரக்டர்களில் ஒன்றான ஹாவ்க் கேரக்ரில் நடித்து புகழ்பெற்றார். இது தவிர மேலும் பல ஹாலிவுட் படங்களில் நடித்தார். கடந்த 2008ம் ஆண்டு வெளியான "தி ஹர்ட் லாக்கர்" படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். அதேபோல 2010ம் ஆண்டு வெளியான "தி டவுன்" படத்தின் சிறந்த துணை நடிகருக்காக ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.
இவர் கடந்த 2ம் தேதி விபத்து ஒன்றில் சிக்கினார். புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு காரில் வீடு திரும்பியபோது பனிப்புயலில் சிக்கி கார் விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், படுகாயமடைந்த ரென்னரை மீட்டு, அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது உடல்நலம் தேறி உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டு, “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!