
பிரபாஸ் உடன் மோதும் ஜெயம் ரவி
ஆக 28, 2023
Advertisement
என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ரிலீஸூக்கு தயாராகி வரும் படம் "இறைவன்". ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்தனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெறாததால் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தை வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே தேதியில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள "சலார்" திரைப்படமும் வெளியாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!