
ஜெயம் ரவியின் 30வது படம் ஆரம்பம் : பிரியங்கா மோகன் நாயகியானார்
ஆக 05, 2022
Advertisement
ஜெயம் ரவி நடிப்பில் ‛பொன்னியின் செல்வன், அகிலன்" ஆகிய படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன. இதுதவிர அஹமது இயக்கத்தில் ‛ஜன கன மன" என்ற படத்திலும், அவரது இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயம் ரவியின் 30வது படத்தை ‛‛பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி"" போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ்.எம் இயக்குகிறார். நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். வில்லனாக நட்டி என்கிற நட்ராஜ் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் துவங்கியது. காமெடி கலந்த ரொமான்ஸ் படமாக உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!