
ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து
பின்னர் இந்த வழக்கை தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றது. இதையடுத்து, மார்ச் 9ம் தேதி சென்னையில் ‛ஜனநாயகன்" படத்தின் மறு தணிக்கை நடக்க இருந்தது. ஆனால் சென்சார் போர்டு குழுவினர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட கடைசி நேரத்தில் ரத்தானது.
இந்நிலையில் ரத்தான அந்த மறு தணிக்கை இன்று சென்னையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் மறு தணிக்கை நடக்கவில்லை. மும்பை அல்லது ஆந்திராவில் இருந்து சிறப்பு தணிக்கை குழுவினர் படத்தை பார்ப்பதாக சொன்னார்கள். ஆனால் இன்று படக்குழுவுக்கு அழைப்பு சென்சார் தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லையாம். தற்போதைய சூழலில் படம் எப்போது மறு தணிக்கைக்கு வருகிறது என்பதே தெரியவில்லை என்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!