
ஜனநாயகன் படத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்... தெலுங்கில் பின் வாங்கிய வினியோகஸ்தர்?
விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த "ஜனநாயகன்" படத்தை எப்படியாவது பெரிய வெற்றிப் படமாக்க வேண்டும் என விஜய் தரப்பு பலத்த முயற்சிகளைச் செய்து வருகிறது. இப்போது "பராசக்தி" படமும் போட்டிக்கு வந்துவிட்டது என்பதால் அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்கு விஜய் ரசிகர்களின் சண்டை சிவகார்த்திகேயனை நோக்கி அதிகமாகவே இருக்கும். அஜித்துடனும், அஜித் ரசிகர்களுடனும் மோதிய விஜய் ரசிகர்கள், சிவகார்த்திகேயனுடன் சண்டை போட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே, தெலுங்கு வெளியீட்டில் "ஜனநாயகன்" படத்திற்கு ஒரு பின்னடைவு என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை "வாத்தி" உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பிரபல நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கியதாகத் தகவல் வெளியாகின. ஆனால், தற்போது அந்த நிறுவனம் பின்வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
தெலுங்கில் பொங்கலை முன்னிட்டு, பிரபாஸ் நடித்துள்ள "தி ராஜா சாப்", சிரஞ்சீவி நடித்துள்ள "மனசங்கர வரபிரசாத் காரு", உள்ளிட்ட ஐந்து நேரடி தெலுங்குப் படங்கள் வெளியாக உள்ளது. அதனால், தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் "ஜனநாயகன்" படத்திற்கு தியேட்டர்களும் கிடைக்காது என்பதால் தற்போது பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!