
ஓட்டம் குறையும் ஜெயிலர்
நாளை இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அது மட்டுமல்லாது ஷாரூக்கான் நடித்துள்ள "ஜவான்" படம் நாளை தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியாகிறது. அதனால், "ஜெயிலர்" படத்திற்கான வரவேற்பும் குறையும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் இப்படம் தலா 200 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதர மாநிலங்களில் 200 கோடிக்கும் கூடுதலான வசூலைப் பெற்றுள்ளது.
"ஜெயிலர்" படத்தின் வசூல் சாதனை அப்படியே நிலைத்திருக்குமா, அல்லது விஜய் நடித்து அடுத்த மாதம் வெளியாக உள்ள "லியோ" படம் முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!