
ஜெயிலர் 2 டிரைலர் - எந்தெந்த சாதனைகளை முறியடிக்கும்?
அக் 06, 2026
Advertisement
ரஜினிகாந்த், சுராஜ் வெஞ்சாரமூடு, எஸ்ஜே சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள "ஜெயிலர் 2" படத்தின் டிரைலர் நேற்று மாலை 6 மணிக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் யு டியூப் தளத்தில் வெளியானது.
காலை 9 மணி நிலவரப்படி தமிழ் டிரைலர் 10 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 3.2 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தி டிரைலர் 3.1 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்து கடந்த 2025ம் வருடம் வெளிவந்த "கூலி" படத்தின் தமிழ் டிரைலர் 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. ஹிந்தி டிரைலர் யு டியூபில் இரண்டு சேனல்களில் சேர்த்து 9 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 7 மில்லியன் பார்வைகளையும் பெற்றது.
அந்த சாதனையை "ஜெயிலர் 2" டிரைலர் முறியடிக்குமா என்பது இன்று மாலைதான் தெரிய வரும்.
ரஜினிகாந்த் நடித்து இதுவரை வெளியான படங்களின் டிரைலர்களில் 2018ல் வெளிவந்த "2.0" படத்தின் ஹிந்தி டிரைலர் மொத்தமாக 96 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அப்படத்தின் தமிழ் டிரைலர் 23 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த 2026ம் வருடத்தைப் பொறுத்தவரையில் விஜய்யின் கடைசி படமான "ஜனநாயகன்" டிரைலர் 63 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
ரஜினியின் தமிழ்ப் பட டிரைலர்களில் மொத்த பார்வைகளில் 2023ல் வெளிவந்த "ஜெயிலர்" படத்தின் "அபிஷியல் ஷோகேஸ்" டிரைலர் 33 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
ரஜினிகாந்த்தின் "ஜெயிலர் 2" டிரைலர் எந்தெந்த சாதனைகளை முறியடிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!