5 மொழிகளில் வெளியாகும் ஜெய் பீம்
அக் 25, 2021
Advertisement
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைப்பில், சூர்யா, லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கும் படம் "ஜெய் பீம்". இப்படத்தின் தமிழ், தெலுங்கு டிரைலர் கடந்த வாரம் வெளியானது. தற்போது கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள். அடுத்து ஹிந்தியிலும் வெளியிட உள்ளார்களாம். முதலில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில்தான் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். தற்போது ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.
இப்படத்தின் தமிழ் டிரைலர் யு டியூபில் 12 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 3 லட்சத்திற்கும் கூடுதலான பார்வைகளையும் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!