
‛‛பிரசாந்த் நீல் - அஜித் சந்தித்தது உண்மை.. ஆனால்... - சுரேஷ் சந்திரா வெளியிட்ட தகவல்
ஜூலை 28, 2024
Advertisement
தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வரும் அஜித் குமார், அடுத்தபடியாக கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக கடந்த சில தினங்களாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛அஜித் - பிரசாந்த் நீல் இருவரும் சந்தித்தது உண்மைதான். ஆனால் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அந்த சந்திப்பின்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்றுவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று தெரிவித்திருக்கிறார். இருப்பினும் ‛எதிர்காலத்தில் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசை" என கூறியிருக்கிறார். இதன் மூலம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!