
பராசக்தி வெற்றி படமா?
பிப் 09, 2026
Advertisement
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்த "பராசக்தி" படம், ஒரு மாதத்துக்குள் ஓடிடியில் வெளியாகிவிட்டது. உண்மையில் இந்த படம் வெற்றி படமா என்று விசாரித்தால் படத்தின் பட்ஜெட், நடிகர், நடிகைகள் சம்பளம், வரவு, செலவு, வியாபாரம், தியேட்டர் வசூல் ஆகியவை தயாரிப்பாளர் தரப்புக்கு மட்டுமே தெரியும். படத்தில் நடித்த பலருக்கும் கூட அது தெரிய வாய்ப்பில்லை.
தமிழ், தெலுங்கில் ரிலீஸ். பல மொழிகளில் ஓடிடி, சாடிலைட்ஸ் ரைட்ஸ், மியூசிக் ரைட்ஸ், மற்ற வியாபாரத்தை கணக்கிட்டால் படம் பெரியளவில் நஷ்டமாகி இருக்க வாய்ப்பு இல்லை. தியேட்டர் வசூல் 100 கோடியை தாண்டிவிட்டது. ஆகவே, படம் எந்த அளவுக்கு லாபம் அல்லது எந்த அளவுக்கு நஷ்டம் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். படக்குழுவை பொறுத்தரையில் சில விமர்சனங்கள் வந்தாலும் பராசக்தியை வெற்றி படமாகவே சொல்கிறார்கள். படத்தை தயாரித்த ஆகாஷ் பாஸ்கரனுக்கும் பண விஷயத்தில் பிரச்னை இல்லை என்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!