தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா
ஏப் 30, 2025
Advertisement
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாக சைதன்யா. சில மாதங்களுக்கு முன் இவர் நடித்த ‛தண்டேல்" படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது தனது 24 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தேவ் கட்டா இயக்கும் மாயசபா என்ற அரசியல் கலந்த வெப்சீரிஸில் நாக சைதன்யா நடிப்பதாக சில தினங்களாக செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை, இந்த படத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நாக சைதன்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாக சைதன்யா தற்போது கார்த்திக் வர்மா இயக்கத்தில் தனது 24வது படத்தில் நடிக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் மர்மங்கள் கலந்த சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக உருவாகிறது. இதை பி.வி.எஸ்.என். பிரசாத் சுகுமார் உடன் இணைந்து தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படம் பற்றிய முன்னோட்ட வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!