பார்த்திபனுக்குத் தெரியாமல் இரவின் நிழல் ஓடிடி வெளியீடு
நவ 12, 2022
Advertisement
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கம், நடிப்பில் வெளிவந்த "ஒரே ஷாட்" படம் "இரவின் நிழல்". ஏஆர் ரகுமான் இசையமைத்த இந்தப் படம் கடந்த ஜுலை மாதம் 15ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. பொதுவாக ஒரு படம் தியேட்டர்களில் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து ஓடிடி தளங்களில் வெளிவந்துவிடும். ஆனால், இந்தப் படம் வெளிவந்து நான்கு மாதங்களாகியும் ஓடிடியில் வெளிவரவில்லை.
இந்நிலையில் படத்தைத் திடீரென ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அது குறித்து படத்தின் இயக்குனர் பார்த்திபனுக்கும் தெரியவில்லை போலிருக்கிறது. இத்தனைக்கும் படத்தில் பார்த்திபனும் ஒரு தயாரிப்பாளர். படம் ஓடிடியில் வெளியானது குறித்து பார்த்திபன், “மகிழ்ச்சியை கூட… அறிவித்து அனுபவிக்க முடியவில்லை. அமேசானில் "இரவின் நிழல்" எனக்கேத் தெரியாமல்! பிளீஸ் நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள்(single shot) ஆதரவை தர வேண்டுகிறேன்!
நன்றியுடன்,” என்று பதிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!