
ஜவ்வாது பெண்ணானது... ரெண்டு விண்மீன்கள் கண்ணானது...! - இதயம் திருடும் இன்ஸ்டா குயின்ஸ்
"லவ்விங் ஸ்டார்" லாஸியா
சொந்த ஊர் கேரள மாநிலம் கோழிக்கோடு... எம்.பி.ஏ., படித்ததும் கொரோனா ஊரடங்கு வந்திருச்சு. எனக்கு தமிழ் சினிமா பாட்டு பிடிக்கும் என்பதால் இன்ஸ்டாவில் "பொண்ணு ஆஷ்" என்ற என் செல்ல பெயரில் ரீல்ஸ் பண்ண ஆரம்பித்தேன். பழைய பாடல் பாடி, நடித்து பண்ணின ரீல்ஸ் நல்ல ரீச் ஆனது.
அதை பார்த்து நிறைய இயக்குனர்கள் நடிக்க கூப்பிட்டாங்க. இப்போ "சைரன்" என்ற கிரைம், திரில்லர் படத்தில் அறிமுகம் ஆகுறேன். அஸ்வதி என்ற என் பெயரையும் லாஸியா என்று மாற்றி விட்டேன். அடுத்தது தமிழில் சரத்குமார் நடிக்கும் படத்தில் ஒரு ஐ.டி., நிறுவன பணியாளராக நடிக்கிறேன். என்ன தான் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரீல்ஸ் ஒரு பக்கம் செய்துட்டு இருக்கேன். 1 மில்லியன் பாலோவர்ஸ் வந்துட்டாங்க. இரண்டு படங்கள் நடிப்பதால் இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளி தான்...
"வைரல் பியூட்டி" சரண்யா
வழக்கம்போல் "டிவி" நிகழ்ச்சி தொகுப்பாளர், மாடலிங்... சிறப்பாக போகுது. டிவிக்கு பின் சினிமா தானேனு முயற்சி செய்து லட்சுமி மேனன் நடித்த ஏ.ஜி.பி.," உட்பட சில படங்களில் நடித்தேன். இப்போ பிரபல இயக்குனரின் படம் ஒன்றில் முக்கிய கேரக்டரில் நடிக்க போறேன். ஒரு படத்தில் ஒரு கேரக்டர் நடித்தால் அதே கேரக்டர் தான் அடுத்த படங்களில் தராங்க. இது தமிழ் சினிமாவின் சாபம்.
வேற கேரக்டர்கள் தந்தால் மறைந்து கிடக்கும் திறமைகளை நிரூபிக்கலாமே... கொரோனா ஊரடங்கில் விதவிதமா போட்டோ ஷூட் பண்ண ஆரம்பித்தேன். சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூரில் அருவி பகுதியில் பண்ணின ஷூட் வைரல் ஆனது. அடுத்த ஷூட் போயிட்டு இருக்கு... அப்புறம் என்னை மாதிரி தீபாவளிக்கு குலோப் ஜாமூன் சாப்பிட்டு, மொட்டை மாடியில் நின்று வானத்தில் சிதறும் பட்டாசுகளை ரசித்து கொண்டாடுங்க.
"ராக்கிங் டான்ஸர்" ரேமா
சில சீரியல்களில் நடிச்சுட்டு இப்போ "டான்ஸ் ஜோடி டான்ஸ்" டிவி ஷோவில் பிஸி. சின்ன வயதில் பரதம் கற்ற நான் சாண்டி, ஸ்ரீதர் என பிரபல மாஸ்டர்களிடம் டான்ஸ் ஆடியதால் பல வகை டான்ஸ் அத்துப்படி. சினிமாவில் எதிர்பார்க்கும் கேரக்டர் கிடைக்காததால் வெயிட்டிங். மேக்கோவர் அகாடமி வைத்திருப்பதால் மேக்கப், டிரெயினிங் ஒரு பக்கம் போகுது. பரீனா, வைசாலி தணிகா, ஸ்ரீதேவி, சாய் காயத்ரி, பவித்ரா ஜனனி என சீரியல் ஹீரோயின்களுக்கு மேக்கப், ஷூட் பண்ணினேன்.
மல்டிமீடியா டெக்னலாஜி படிப்பதால் சினிமா, சீரியலில் முழுநேரம் பயணிக்க போறேன். சொந்த ஊர் மதுரைக்கு வந்தாலே மல்லிகைப்பூ வாங்கி தலை நிறைய வைப்பேன். வீட்டு மொட்டை மாடியில் அதிக ரீல்ஸ் பண்ணி "மாடி பேமஸ்" ஆயிடுச்சு. சென்னையில் இருப்பதால் மதுரையை மிஸ் பண்றேன். "தினமலர்" வாசகர்களுக்கு ஹேப்பி தீபாவளி...




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!