இந்தியன் 3 டிரைலர் : திடீர் அப்டேட் தந்த ஷங்கர்
ஜூலை 11, 2024
Advertisement
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ள "இந்தியன் 2" படம் நாளை(ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு அடுத்து "இந்தியன் 3" படமும் வெளியாக உள்ளது.
கேரளாவில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் "இந்தியன் 3" படம் பற்றி ஷங்கர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். "இந்தியன் 3" படம் வெளிவருவதற்கு எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஷங்கர், “ஆறு மாதங்களுக்குள்ளாக "இந்தியன் 3" படம் வெளிவர வாய்ப்புள்ளது. விஎப்எக்ஸ் வேலைகள் முடிந்தால், எல்லாம் நல்லபடியாக நடந்தால் நடக்கும். கூடுதலாக ஒரு தகவல் சொல்கிறேன். "இந்தியன் 2" படத்தின் முடிவில் "இந்தியன் 3" படத்தின் டிரைலரை நீங்கள் பார்க்கலாம்,” என்றார்.
அதனால், "இந்தியன் 2" படம் முடிந்த பின் ரசிகர்கள் எழுந்து சென்றுவிட வேண்டாம். "இந்தியன் 3" டிரைலரைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!