
இந்தியன் 2 விவகாரம் : ஷங்கர் - லைகா மீண்டும் பேச்சுவார்த்தை
ஷங்கர், ராம்சரண் நடிப்பில் தில்ராஜூ தயாரிப்பில் ஒரு படத்தை தொடங்கினார். இதையடுத்து இந்தியன்-2 படத்தை இயக்கி விட்டுதான் வேறு படத்தை இயக்க செல்ல வேண்டும் என்ற நீதிமன்றம் மூலமாக ஷங்கருக்கு தடை போட்டது லைகா நிறுவனம். ஆனால் விசாரணைக்குப் பிறகு ஷங்கருக்கு தடை கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் ராம்சரண் நடிக்கும் படவேலைகளை தொடங்கினார் ஷங்கர். இந்தநிலையில், நேற்று அந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டைரக்டர் ஷங்கரிடத்தில் இந்தியன்-2 படம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லி நான்கு வாரங்கள் கால அவகாசம் கேட்டார். இதனால் நீதிபதி வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!