‛இந்தியன் 2 முதல் பாடல் வெளியானது : ஜூன் 1ல் இசை வெளியீடு
மே 22, 2024
Advertisement
இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல் கூட்டணியில் உருவான இந்தியன் 2 படம் தற்போது இந்தியன் 3-ஆகவும் விரிவடைந்துள்ளது. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜூலை 12ல் படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் மே 22ம் தேதியான இன்று ‛இந்தியன் 2" படத்திலிருந்து ‛பாரா..." என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். பா.விஜய் எழுதி உள்ள இந்த பாடலை அனிருத், ஸ்ருத்திகா ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். தாய் மண்ணிற்காக போராடும் வீரனை பற்றிய தேச பக்தி பாடலாக வெளியாகி உள்ளது. அனிருத்தின் பின்னணி இசை, குரல் ஆகியவை அருமையாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக ‛‛என் தாய் மண் மேல் ஆனை... இது தமிழ் மானத்தின் சேனை... அட வெள்ளை இரத்தம் தொட்டு... இனி வாளில் என்று சானை..."" என்ற வரிகள் ரசிகர்களை வெகுவாய் கவர்ந்துள்ளது. இதை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் மட்டுமின்றி ‛பாரா" பாடல், தெலுங்கில் ‛சவுரா"வாகவும், ஹிந்தியில் ‛ஜாகோ..." என்ற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ல் நடப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!