இந்தியன் 2 : கமலுக்கு ஜோடியாகும் தீபிகா?
ஆக 02, 2022
Advertisement
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்க ஆரம்பமான படம் ‛இந்தியன் 2". படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து, தயாரிப்பாளர், இயக்குனர் ஷங்கர் இடையே ஏற்பட்ட மோதல் போன்ற பிரச்னைகளால் இதன் படப்பிடிப்பு நின்று போனது. இதனால் தெலுங்கில் ராம்சரணை வைத்து படம் இயக்க துவங்கினார் ஷங்கர். இதனால் தயாரிப்பு நிறுவனம் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் இருவரும் சமாதானம் ஆகினர். இதையடுத்து விரைவில் இந்தியன் 2 படம் துவங்க உள்ளது.
தற்போது ராம் சரண் படத்தை இயக்கி வரும் ஷங்கர் அதை முடித்ததும் இந்தியன் 2வை துவங்க உள்ளார். இந்தியன் 2வில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்தார். அவருக்கு குழந்தை பிறந்ததால் இந்த படத்தை விட்டு விலகினார். இனி அவர் இந்த படத்தில் தொடர முடியாது என்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டு புதிதாக இன்னொரு நாயகியை வைத்து படமாக்க திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில் காஜலுக்கு பதில் அவரது வேடத்தில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!