
இந்தியன் 2 : கமலுக்கு ஜோடியாகும் தீபிகா?
தற்போது ராம் சரண் படத்தை இயக்கி வரும் ஷங்கர் அதை முடித்ததும் இந்தியன் 2வை துவங்க உள்ளார். இந்தியன் 2வில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்தார். அவருக்கு குழந்தை பிறந்ததால் இந்த படத்தை விட்டு விலகினார். இனி அவர் இந்த படத்தில் தொடர முடியாது என்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டு புதிதாக இன்னொரு நாயகியை வைத்து படமாக்க திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில் காஜலுக்கு பதில் அவரது வேடத்தில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!