ட்ரோல் செய்பவர்களை புறக்கணித்துவிடுங்கள் : அல்லு அர்ஜூன் அறிவுரை
ஜூலை 29, 2026
Advertisement
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்கா படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பிற்கு இடையே ஒரு சிறிய இடைவேளை எடுத்துக் கொண்ட அல்லு அர்ஜூன் இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து 1000 ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்தார். அவர்களுடன் செல்பியும் எடுத்து கலந்துரையாடினார். அதோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 1000 அல்லு அர்ஜூன் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலின் போது, அல்லு அர்ஜூன் தனது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், இணையதளங்களில் எதிர்மறையை பரப்பும் ட்ரோலர்களுக்கும் ஒரு முக்கியச் செய்தியை கூறினார். ‛‛உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால், அதற்காக உங்கள் பொன்னான நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக அதை எளிதாகப் புறக்கணித்துவிட்டுச் செல்ல வேண்டும்"" என்று அறிவுறுத்தினார்.
தமிழில் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து, ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்த இயக்குநர் அட்லி மற்றும் புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜூன் ஆகிய இருவரும் முதன்முறையாக இணையும் இந்த ராக்கா படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் இவர் நடிக்க உள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!