மமிதா பைஜூ ஒரு ஸ்டார் மெட்டீரியல் என அன்றே கணித்தேன் : ரஜிஷா விஜயன்
பிப் 04, 2026
Advertisement
மலையாள திரையுலகில் ‛பிரேமலு" என்கிற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. அதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அவர் நடித்த டியூட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மமிதா. இது தவிர சூர்யாவின் 41வது படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த நிலையில் கர்ணன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரஜிஷா விஜயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் மமிதா பைஜூ பற்றி கூறும்போது, “நானும், மமிதா பைஜூவும் 2020ல் கோ கோ என்கிற படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது அவரது துடிப்பையும் சுறுசுறுப்பையும் பார்த்து இவர் ஒரு ஸ்டார் மெட்டீரியல்.. பின்னாளில் ஒரு பெரிய ஸ்டார் ஆக வருவார் என்று அங்கிருந்தவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் நம்பவில்லை. ஆனால் நான் சொன்னது தான் இப்போது நடக்கிறது.. இன்னும் திரை உலகில் அவர் மிகப்பெரிய உயரத்தை தொடுவார்” என்று கூறியுள்ளார். ஒரு இளம் நடிகை சக நடிகையை மனம் விட்டு பாராட்டி உள்ளது ஆச்சரியமான விஷயம் தான்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!