பட்டாம்பூச்சியாக திரும்பிவந்த ஹனி ரோஸ்
ஏப் 23, 2022
Advertisement
தமிழில் "சிங்கம்புலி" படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். ஆரம்பத்தில் மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு, ஒருகட்டத்தில் வரிசையாக நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடிக்க, மலையாளத்தில் முக்கியமான நடிகையானார் ஹனிரோஸ்.. ஆனாலும் தமிழில் பெரிய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை
கடைசியாக 2014-ல் வெளியான கந்தர்வன் என்கிற படத்தில் நடித்திருந்த ஹனி ரோஸ் தற்போது 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சுந்தர்.சி ஹீரோவாகவும், ஜெய் சைக்கோ வில்லனாகவும் நடித்துவரும் பட்டாம்பூச்சி என்கிற படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஹனி ரோஸ். பத்ரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் ஹனி ரோஸுக்கு வெற்றிகரமான ரீ என்ட்ரியாக இருக்குமா என பொருத்திருந்து பார்க்கலாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!