
தங்கலான் பற்றி ஹாலிவுட் நடிகர் கொடுத்த அப்டேட்
நவ 19, 2023
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த பீரியட் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜனவரி 26ம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், இந்தப் படத்தில் எனக்கான டப்பிங் பணிகளை முடித்து விட்டேன். இப்படம் மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!