கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இதோ
ஆக 22, 2023
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "கேம் சேஞ்சர்". கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார் . அரசியல் கதை களத்தில் உருவாகும் இப்படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறாராம் ராம் சரண். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படம் முதலில் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் சூழல் இருந்தது. ஆனால், ஒரே சமயத்தில் ஷங்கர் இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்கள் படப்பிடிப்பை நடத்தி வருவதால் தாமதம் ஆகிறது. இந்த நிலையில் கேம் சேஞ்சர் படத்தை ஆகஸ்ட் 15, 2024ம் அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!