என் பெயர் ஸ்ருதி : ஹன்சிகாவின் புதிய முகம்
ஜூலை 06, 2021
Advertisement
கிட்டத்தட்ட 50 படங்களை நடித்துவிட்ட ஹன்ஷிகா, கடந்த சில வருடங்களாக மஹா என்கிற ஒரே படத்தில் நடித்தாலும் நடித்தார், அந்தப்படமும் இதுவரை வெளியானபாடில்லை.. வேறு எந்த புதிய படங்களும் அவர் கைவசம் இல்லை.. இந்த நிலையில் ஹன்சிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார். படத்திற்கு "மை நேம் இஸ் ஸ்ருதி" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
இந்தப்படத்தின் துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றது. இந்தப்படத்தை ஸ்ரீனிவாஸ் ஓம்கர் என்பவர் இயக்குகிறார். இந்தப்படம் பற்றி அவர் கூறும்போது, “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பார் என சொல்வார்கள்.. ஆனால் ஒரு பெண் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு ஆண் எப்படி பொறுப்பாகிறான் என்பதை பற்றிய படமாக இது உருவாகிறது” என்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!