மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ்
டிச 02, 2023
Advertisement
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிகராக தனது 25வது படமான "கிங்ஸ்டன்" எனும் படத்தில் நடித்து வருகிறார். கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடிக்கிறார் . இப்படத்தை ஜி.வி. பிரகாஷின் பேர்லல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாக உருவாகிறது. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கப்பல் அரங்கம் அமைத்து நடத்தி வந்தனர். இப்போது இதன் படப்பிடிப்பு கடலில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் கடலில் உள்ள மர்மத்தை தேடி செல்லும் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!