‛கில்லி ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி
ஏப் 20, 2024
Advertisement
தரணி இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 2004ல் வெளிவந்த படம் "கில்லி". விஜய்யின் முக்கியமான படங்களில் இன்றும் கில்லிக்கு முக்கிய இடம் உண்டு. இந்தப்படம் இப்போது ரீ-ரிலீஸ் முறையில் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளில் 350 தியேட்டர்களிலும் தமிழ், கேரளா, கர்நாடகாவில் 300 தியேட்டர்களிலும் வெளியாகி உள்ளது. விஜய்யின் புதிய படம் ரிலீஸாவது போன்று ரசிகர்கள் இந்த படத்திற்கு வரவேற்பு கொடுத்து கொண்டாடி உள்ளனர்.
இதுபற்றி த்ரிஷா வெளியிட்ட பதிவில், ‛‛ "கில்லி" அசுர வெற்றி அதிர்வுகளுடன் மீண்டும் பொழுது விடிந்துள்ளது. 2004ல் தொடங்கிய பயணம் 2024ல் முழு வட்டம் நிறைவடைந்து மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து நிற்கிறது"" என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!