
துருவ நட்சத்திரம் ரிலீஸ் : கவுதம் மேனன் தகவல்
ஜன 27, 2025
Advertisement
கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலர் நடித்துள்ள படம் "துருவ நட்சத்திரம்". இப்படம் முடிவடைந்து 2017ம் ஆண்டே வெளியாகும் என்று அறிவிப்புகள் வந்தது. ஆனால், அப்போது படம் வெளியாகவில்லை. அதன்பின் சில முறை பட வெளியீடு பற்றி அறிவிப்பு வரும், ஆனால் படம் வராது. கடைசியாக கடந்த வருடம் 2024ல் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று அறிவித்தும் அப்போதும் வெளியாகவில்லை.
இதனிடையே, படம் முடிந்து 12 ஆண்டுகளாக வெளியாகாத "மத கஜ ராஜா" படம் பொங்கலுக்கு வெளியாகி 50 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. அதையடுத்து "துருவ நட்சத்திரம்" உள்ளிட்ட தேங்கி நிற்கும் படங்கள் சிலவற்றை வெளியிட திரையுலகினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், "துருவ நட்சத்திரம்" படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு வருவதாக இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். "மத கஜ ராஜா" படம்தான் அதற்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!