தி கோட் முன்பும், பின்பும் இடைவெளி வாரம்…
ஆக 27, 2024
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவரின் படம் வெளிவந்தால் அதற்கு முன்பும், பின்பும் படங்களை வெளியிடப் பலரும் தயங்குவது பல வருடங்களாகவே நடந்து வருகிறது. வேறு வழியில்லாமல் அப்படி படங்களை வெளியிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அடுத்த வாரம் விஜய் நடித்துள்ள "தி கோட்" படம் வெளிவர உள்ளது. அதனுடன் போட்டி போட யாரும் தயாராக இல்லை. தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த தியேட்டர்களிலும் அப்படம் வெளியாகும் என்றும் சொன்னார்கள். ஆனால், அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அடுத்த வாரம் அப்படத்தின் வெளியீடு காரணமாக இந்த வாரமே குறிப்பிடும்படியான படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா நடித்து தெலுங்கில் தயாராகி தமிழிலும் டப்பிங் ஆகியுள்ள "சூர்யாஸ் சாட்டர்டே", அர்ஜூன் நிக்கி கல்ரானி நடித்து மலையாளத்தில் தயாராகி தமிழிலும் வெளியாக உள்ள "விருந்து" ஆகிய இரண்டு படங்கள்தான் இந்த வாரத்தின் முக்கிய படங்கள். "விருந்து" படத்தில் அர்ஜூன் கதாபாத்திரம் மட்டும் தமிழ் பேசி நடித்துள்ளதாகத் தெரிகிறது. இவை தவிர "காட்டானை" என்ற படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் "சூர்யாஸ் சாட்டர்டே" படத்தில் இப்போதைய டிரெண்டிங் ஸ்டார் எஸ்ஜே சூர்யா இருப்பதால் படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!