கேம் சேஞ்சர் கிளைமாக்ஸ் நிறைவு : அடுத்து இந்தியன் 2
மே 10, 2023
Advertisement
இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தையும், கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார். இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியன் 2 படத்தின் சண்டைக் காட்சியை தென்னாப்ரிக்காவில் படமாக்கினார். இதில் கமல், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அதன்பின் கேம் சேஞ்சர் படப்பிடிப்பிற்கு திரும்பினார். இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பை முடித்து விட்டதாக ஷங்கர் அறிவித்துள்ளார். மேலும் இந்தியன்2 பட வேலைகள் நாளை(மே 11) முதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஷங்கர் கூறுகையில், ‛‛கேம் சேஞ்சர் படத்தின் எலெக்டிரிபையிங் கிளைமாக்ஸ் இன்று முடிவடைந்தது. நாளை முதல் இந்தியன்2-வின் சில்வர் புல்லட் சீக்வென்ஸ் மீது கவனம்"" என குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி ஷங்கர் கூறுகையில், ‛‛கேம் சேஞ்சர் படத்தின் எலெக்டிரிபையிங் கிளைமாக்ஸ் இன்று முடிவடைந்தது. நாளை முதல் இந்தியன்2-வின் சில்வர் புல்லட் சீக்வென்ஸ் மீது கவனம்"" என குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!