எழுத்திலிருந்து திரைக்கு...: தமிழ் சினிமாவாக மாறிய நாவல்கள்
ஆக 05, 2026
Advertisement
எழுத்தும் திரையும் கலை உலகத்தின் இரு கண்கள். ஒரு நாவலின் ஆழமான கதையாடலும், கதாபாத்திரங்களின் மன உணர்வுகளும் காட்சி ஊடகமான திரைப்படமாக மாறும் போது அது பல கோடி மக்களைச் சென்றடைகிறது. தமிழ் சினிமா அதன் ஆரம்பக் காலத்திலிருந்தே இலக்கியத் தழுவல்களை நம்பகமான அடித்தளமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
புராணக் கதைகளில் தொடங்கி, பின் சமூக நாவல்கள், துப்பறியும் கதைகள் மற்றும் நவீன எதார்த்த இலக்கியங்கள் வரை தமிழ் நாவல்கள் பல திரையில் காவியங்களாக உருவெடுத்துள்ளன. அவற்றில் சில இதோ...
1. காவியங்களும் வரலாற்றுத் தழுவல்களும்
பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ண மூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" 5 பாகங்களாக வெளி வந்த நாவல். எழுத்து வடிவில் பல தலைமுறைகளாக மக்களைக் கவர்ந்த இந்த நாவலை, இயக்குநர் மணிரத்னம் இருபாக திரைப்படமாகச் செதுக்கி உலகளவில் தமிழரின் பெருமையை உயர்த்தினார்.
"அரவான்" - சு. வெங்கடேசனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற "காவல் கோட்டம்" நாவலின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் வசந்தபாலன் "அரவான்" திரைப்படத்தை உருவாக்கினார்.
பரதேசி - ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கதையை பி. எச். டேனியலின் "Red Tea" (தமிழில்: எரியும் பனிக்காடு) நாவலைத் தழுவி பாலா "பரதேசி" திரைப்படமாக இயக்கியிருந்தார்.
2. இயக்குநர் மகேந்திரனின் படைப்புகள்
தமிழ் திரையுலகை வணிகப் பாதையிலிருந்து எதார்த்த நிலைக்குத் திருப்பிய பெருமை இயக்குநர் மகேந்திரனையே சாரும். இவரது பெரும்பான்மையான திரைப்படங்கள் நாவல்களையும் கதைகளையும் மையமாகக் கொண்டவை.
முள்ளும் மலரும்: உமா சந்திரனின் முள்ளும் மலரும் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதே நாவலில் வரும் காளி கதாபாத்திரத்தை மையப்படுத்தி காளி என்ற கேரக்டரையே ரஜினிக்கு வைத்து படத்தை இயக்கி ரஜினிகாந்தின் நடிப்புத் திறனை உலகுக்குக் காட்டப்பட்டது.
உதிரிப்பூக்கள்: புதுமைப்பித்தனின் "சிற்றகல்" என்ற கதையைத் தழுவி உருவாக்கப்பட்டு, தமிழ் சினிமாவின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.
நண்டு: பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.
3. சுஜாதாவும், ஜெயகாந்தனும்
எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள் சினிமாவுக்குத் தேவையான வேகம், அறிவியல், மற்றும் விறுவிறுப்பைக் கொண்டிருந்தன. இவரது ப்ரியா, காயத்ரி, விக்ரம், போன்ற நாவல்கள் அதே பெயர்களிலேயே திரைப் படங்களாக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றன.
மறுபுறம், ஜெயகாந்தனின் படைப்புகள் சமுதாயத்தின் அடிமட்ட மனிதர்களின் வாழ்க்கையையும் மனப்போராட்டங்களையும் பேசின. இவரது சாகித்ய அகாடமி விருது பெற்ற "சில நேரங்களில் சில மனிதர்கள்", "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்", மற்றும் "உன்னைப் போல் ஒருவன்" போன்ற நாவல்களும் அதே பெயரில் அழுத்தமான திரைப்படங்களாக மாறின.
4. வெற்றிமாறனின் நவீன இலக்கியத் தழுவல்கள்
நவீன காலத்தில் தமிழ் இலக்கியங்களை வெற்றிகரமான வணிகச் சினிமாவாகவும் கலைப் படைப்பாகவும் மாற்றுவதில் இயக்குநர் வெற்றிமாறன் திகழ்கிறார்.
அசுரன்: பூமணியின் "வெக்கை" நாவலை மையமாகக் கொண்டு உருவானது. நில உரிமை மற்றும் சாதிய ஒடுக்குமுறையை மையமாகக் கொண்ட கதையைத் தனுஷின் சிறப்பான நடிப்பால் திரையில் காவியமாக்கினார்.
விசாரணை: எம்.சந்திரகுமாரின் "லாக் அப்" நாவலை அடிப்படையாகக் கொண்டு, காவல் துறையின் அத்துமீறலைத் தோலுரித்துக் காட்டியது. இது ஆஸ்கர் பரிந்துரை வரை சென்றது.
விடுதலை : எழுத்தாளர் ஜெயமோகனின் "துணைவன்" என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ஒரு நாவலைத் திரைப்படமாக மாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல. புத்தகத்தில் விவரிக்கப்படும் கதாபாத்திரங்களின் மனநிலையைக் காட்சி ஊடகத்தில் கடத்துவது பெரும் சவாலாகும். எனினும், திறமையான இயக்குநர்களும் எழுத்தாளர்களும் நடிகர்களும் இணையும் போது, அந்த நாவல்கள் காலத்தால் அழியாத திரைப்படங்களாக உருவெடுக்கின்றன. தற்காலத்திலும் தமிழ் சினிமா மீண்டும் இலக்கியங்களை நோக்கிப் பயணிப்பது தமிழ் திரையுலகிற்கும் இலக்கிய உலகிற்கும் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியாகும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!