வசூலில் மாயாஜாலம் காட்டிய துரந்தர் முதல் வா வாத்தியார் வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ்....!
ஜன 30, 2026
Advertisement
வாரம் வாரம் ஓடிடி ரசிகர்களைக் குதுகலிக்க வரும் புதுப்படங்களின் வரிசை இந்த வாரமும் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வகையில் "வா வாத்தியார் முதல் "1200கோடியை அசால்ட்டாக தொட்ட "துரந்தர்" எனப் பட்டியல் நீள்கிறது.
வா வாத்தியார்
நீதிமன்ற சிக்கலிலிருந்து விடுபட்டுக் கடந்த பொங்கல் வெளியீடாக வந்த திரைப்படம் "வா வாத்தியார்". எம்ஜிஆர் ரசிகராக இருக்கும் ரஜீகிரண் தனது பேரனான கார்த்தியை எம்ஜிஆர் ரசிகராக வளர்க்கிறார். பின்னர் அவர் தடம் மாறி நம்பியார் ரசிகராக மாறுகிறார். இறுதியில் அவர் என்ன செய்தார் என்ற கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். நலன் குமாரசாமி இயக்கத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் நேற்றுமுன்தினம் (ஜன.28ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார்.
துரந்தர்
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர்சிங் நடிப்பில் வெளியான திரைப்படம் "துரந்தர்". கதையின் நாயகியாக சாரா அர்ஜுன் நடித்து இருந்தார். ரகசிய "ரா" ஏஜெண்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த இந்த படம் ரூ.1200கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று (ஜன.30ம் தேதி) வெளியாகவுள்ளது.
சர்வம் மாயா
மலையாள இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான திரைப்படம் "சர்வம் மாயா". மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த திரைப்படம் இன்று (ஜன.30ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டார், சிம்ப்ளி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.
சாம்பியன்
தெலுங்கு இயக்குநர் பிரதீப் அத்வைதம் இயக்கத்தில் நடிகர் ரோஷன் மேகா, நடிகை அனஸ்வர ராஜன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "சாம்பியன்". விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த திரைப்படம் நேற்று (ஜன.29ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாகியுள்ளது.
பெட்டாங்
தெலுங்கு இயக்குநர் பிரதீப் பிரதிபதி இயக்கத்தில் வெளிவந்த காமெடி திரைப்படம் "Patang". பட்டம் விடும் போட்டியில் நடக்கும் காமெடி கலந்த சுவாரஸ்யத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் இன்று (ஜன.30ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!