பிளாஷ்பேக் : போலந்து மொழியில் வெளியான முதல் தமிழ் படம்
ஆக 21, 2026
டெக்னிக் கலரில் உருவான முதல் நடன திரைப்படம் "கொஞ்சும் சலங்கை". இந்த படம் தமிழ்நாட்டின் நாட்டுப்புற கதையை தழுவி உருவானது. புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளரான கு.மா.பாலசுப்பிரமணியம் வசனங்களை எழுதினார். கண்ணதாசன், கு.மா.பாலசுப்பிரமணியம் மற்றும் வி.சீதாராமன் ஆகியோர் பாடல்களை எழுதினர். படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, ஆர்.எஸ்.மனோகர் மற்றும் பரதநாட்டியக் கலைஞரான குமாரி கமலா ஆகியோர் நடித்திருந்தனர்.
பார்த்திபன் என்ற மன்னர் (ராமதாஸ்), அபராஜிதா (குமாரி மாதுரி) என்ற நடனக் கலைஞருக்கு ஒரு அரிய வகை சலங்கையைப் பரிசளிக்கிறார். பின்னர் அவரையே ஆசை நாயகியாக வைத்துக் கொள்கிறார். மன்னருக்கு அமரேந்திரன் என்ற மகனைப் பெற்றெடுக்கும் அபராஜிதா, அந்த குழந்தையை மன்னர் குடும்பத்தினர் கொன்று விடுவார்கள் என்று பயந்து, மன்னர் கொடுத்த சலங்கையுடன் குழந்தையை ஒரு பூசாரியிடம் ஒப்படைத்து விட்டு இறந்து போகிறார்.
அமரேந்திரன் இசை, நடனம் மற்றும் தற்காப்புக் கலைகளில் ஆர்வமுள்ள வலிமையான இளைஞனாக (ஜெமினி கணேசன்) வளர்கிறான். பூசாரி சலங்கையை மன்னரிடம் ஒப்படைத்து அமரேந்திரன் உங்கள் மகன் என்று கூறச் செல்கிறார். அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அவர் இறந்து விட சலங்கை அமரேந்திரனுக்கே கிடைக்கிறது; அந்தச் சலங்கையை மன்னரிடம் ஒப்படைக்கிறான்.
அமரேந்திரன், சாந்தா (சாவித்திரி) என்ற அழகான பாடகியைச் சந்திக்கிறான்; அவள் அவன் மீது காதல் கொள்கிறாள். மல்லிகா மன்னரைக் கவர்கிறாள், பின்னர் அரசவை நடனக் கலைஞராக நியமிக்கப்பட்டு, அந்த சலங்கையைப் பரிசாகப் பெறுகிறாள். இப்படி பலவாறாக அந்த சலங்கை கைமாறி என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை.
படத்தலில் இடம்பெறற "சிங்காரவேலனே தேவா" என்ற பாடல் சாகாவரம் பெற்றது. எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் இசையில் உருவான இந்த பாடலை ஜானகி பாடினார். பாடலுக்கு நிகராக நாதஸ்வரத்தை கருகுறிச்சி அருணாசலம் வாசித்தார்.
இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக மொழிகளிலும் புகழ்பெற்றது. போலந்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இது. பிரிட்டிஷ் நிறுவனத்தால், 22-க்கும் மேற்பட்ட மொழிகளில் சப் டைட்டிலுடன் வெளியிடப்பட்டது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!