
பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை
நாடகத்தைப் பார்த்த பாபு மூவீஸ் "வீட்டுக்கு வீடு" என்ற தலைப்பில் திரைப்படமாக எடுத்தனர். ஆனால் அறிவித்தபடி ஜெயலலிதாவால் நடிக்க முடியவில்லை. அப்போது எம்.ஜி.ஆர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். மாஸ் ஹீரோயினாகி விட்டதால் இந்த பேமிலி கதையில் அவர் நடித்தால் சரியாக வராது என்று அவரை தொடர்பு கொள்ளவே இலலை.
அதனால் லட்சுமி நடித்தார். நாடகத்தில் லட்சுமி கேரக்டரில் மனோரமா நடித்திருந்தார். முத்துராமன் நடித்த கதாபாத்திரத்தை ஜெய்சங்கரும், கோபி நடித்த கதாபாத்திரத்தை முத்துராமனும், மணிமாலா கதாபாத்திரத்தை "வெண்ணிற ஆடை" நிர்மலாவும் நடித்தனர். வி.கே. ராமசாமி - நாகேஷ் இருவரும் அப்பா மகனாக காமெடி வேடத்தில் நடித்தனர். சிவி ராஜேந்திரன் இயக்கி இருந்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!