பிளாஷ்பேக் : வெள்ளி விழா பட வாய்ப்பை இழந்த சுரேஷ்
பிப் 11, 2025
Advertisement
தமிழ் சினிமாவின் வெள்ளி விழா படங்களில் முக்கியமானது "பயணங்கள் முடிவதில்லை". கோவையை சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜன் என்ற இளைஞர் சினிமா கனவில் "பயணங்கள் முடிவதில்லை" என்ற கதையை வைத்துக் கொண்டு அதற்காக தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருந்தபோது அப்போது கோவை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தயாராக இருந்த கோவை தம்பியை சந்தித்து கதை சொன்னார். அவரும் "தம்பி நான் எம்.எல்.ஏ, எம்பி, அமைச்சர் இப்படி ரூட் போட்டிருக்கேன் சினிமால இண்ட்ரஸ்ட் இல்லை" என்று கூறியிருக்கிறார். ஒரு வழியாக கடைசியாக "படத்திற்கு இளையராஜா மியூசிக் போட்டா தயாரிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
நேராக சென்னை வந்த சுந்தர்ராஜன், கங்கை அமரன் மூலம் இளையராஜாவை சந்தித்து கதை சொல்ல, கதை அவருக்கு பிடித்துப்போகிறது. காரணம் படத்தின் நாயகன் ஒரு பாடகன். இளையராஜா ஒப்புக் கொண்டதும் பணிகள் ஆரம்பித்தது. அப்போது "பன்னீர் புஷ்பங்கள்" படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. அதில் நடித்த சுரேஷை ஹீரோவாக போடலாம் என்று தயாரிப்பாளர் சொல்ல, சுந்தர்ராஜனும் - சுரேஷை சந்திக்க சென்றார். அப்போது சுரேஷ் ஒரு கார் விபத்தில் சிக்கி எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு மாதங்கள் வரை அவருக்காக காத்திருக்க முடியாது என்று கருதிய சுந்தர்ராஜன், அப்போது கமல்ஹாசன் போன்ற தோற்றதுடன் வலம் வந்து கொண்டிருந்த மோகனை நடிக்க வைத்தார்.
இந்த படத்திற்கு பிறகுதான் மோகன், மைக் மோகனாகவும், வெள்ளி விழா நாயகனாகவும் ஆனார். நாயகியாக பூர்ணிமா தேர்வானார். ஆனால் அவரும் புதிய இயக்குனர், தயாரிப்பாளர் என்பதால் தயங்கினார். ஆனால் கங்கை அமரன் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து "படம் மியூசிக்கல் சப்ஜெக்ட் ராஜா இசை அமைக்கிறார். பாட்டெல்லாம் ரெடி" என்று கூறி அவரை சம்மதிக்க வைத்தார். அதன்பிறகு படம் வெளியான தியேட்டர்களில் எல்லாம் 100 நாள்கள் ஓடியதும் கோவையில் ஒரு தியேட்டரில் 400 நாட்கள் ஓடியதும் வரலாறு.
ஒருவேளை சுரேஷ் இந்தப் படத்தில் நடித்திருந்தால் மோகன் இடத்தை அவர் பிடித்திருக்கலாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!