
பிளாஷ்பேக் : நாடகத்தில் பின்னணி பாடலை உருவாக்கிய சகஸ்ரநாமம்
அந்த காலத்தில் நாடகத்தில் நடிப்பவர்களே பாடியும் நடிக்க வேண்டும். கடைசியில் இருப்பவர்களுக்கும் கேட்க வேண்டும் என்பதால் சத்தமாக பாடும்போது குரல் வளமும் சற்று மாறுபடும். இதை மாற்ற நினைத்தார் சகஸ்ரநாமம்.
இந்த நாடகத்தில் 4 பாடல்கள் இடம்பெறும். அதை புதுவிதமாக இடம்பெறச் செய்யலாம் என சகஸ்ரநாமம் முடிவு செய்தார். அதன்படி, சினிமா பாணியில் அந்த பாடல்களை ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்தார். நாடக மேடையில் அதை கிராம்போன்களில் ஒலிபரப்பினார். அதற்கு நாடக கலைஞர்கள் வாயசைத்தனர். அரங்கே அதைக் கேட்டு அதிர்ந்தது. காரணம், ரசிகர்களுக்கு அது புது அனுபவம்.
நாடகத்தைப் பார்த்த ஏவி மெய்யப்ப செட்டியார் அதன் உரிமையை வாங்கினார். "நாம் இருவர்" என்ற பெயரிலேயே இதை தனது ஏவிஎம் நிறுவனம் மூலம் தயாரித்தார். டி.ஆர்.மகாலிங்கம் ஹீரோ. "நாம் இருவர்" நாடகத்தில் நடித்த டி.ஏ.ஜெயலட்சுமி, ஹீரோயின். வி.கே.ராமசாமி, டி.கே.ராமச்சந்திரன் நடித்தனர். பரதநாட்டியக் கலைஞர் குமாரி கமலா, ஹீரோவுக்கு தங்கையாக நடித்தார். பி.ஆர்.பந்துலுவும் நடித்திருந்தார்.
நாடகத்தில் இடம்பெற்ற பாடல்கள் உட்பட பாரதியாரின் பல பாடல்கள் இதில் இடம் பெற்றது. படம் ஹிட்டானது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…