
பிளாஷ்பேக் : நீயா 2ம் பாகம்
இந்த படத்தின் 2ம் பாகம் தயாராவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவலான தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த படத்தின் 2ம் பாகம் "நானே வருவேன்" என்ற தலைப்பில் ஏற்கெனவே தயாராகி விட்டது. இந்த படம் 1992ம் ஆண்டு வெளியானது.
இந்த படத்தை ஸ்ரீபிரியா இயக்கி, நடித்தார். ரகுமான், சசிகலா, வாகை சந்திரசேகர், கவுதமி, ராதிகா, ரம்யா கிருஷ்ணன் நடித்தனர். முதல் பாகத்தில் மனித உருவம் எடுக்கும் இச்சாதாரி பாம்பான நாகராணி தனது காதலுடன் தனிமையில் இருக்கும்போது அங்கு வரும் கமல்ஹாசனின் நண்பர்கள் அதனை சுட்டு கொன்று விடுவார்கள். கணவன் சாவுக்கு காரணமானவர்களை நாகராணி பாம்பு பழிவாங்குவதுதான் கதை.
இரண்டாம் பாகத்தில் நாகராணியின் கணவர் மறுபிறவி எடுத்து ராஜா என்ற பெயரில் வாழ்கிறார் (ரகுமான்). அதை அறிந்து கொள்ளும் நாகராணி அவரை கண்டுபிடித்து காதலித்து மீண்டும் கணவனாக்க முயற்சிக்கிறாள். இதை அறியும் மருத்துவர்களான ராதிகாவும், வாகை சந்திரசேகரும், நாகராணியிடமிருந்து ராஜாவை மீட்பதுதான் கதை. இந்த படத்திற்கும் சங்கர் - கணேஷ் இசை அமைத்தார். "நீயா" அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தில் இடம்பெற்ற "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் பாடல்" இந்த படத்திலும் பயன்படுத்தப்பட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…