பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன்
ஆக 21, 2025
Advertisement
கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த மோகனுக்கு அப்போது உறுதுணையாக இருந்தவர் திரைப்பட புகைப்பட கலைஞர் ஸ்டில்ஸ் ரவி. மோகனை விதவிதமாக படங்கள் எடுத்து அதனை தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் கொடுத்து வாய்ப்பு தேடியவர். ஸ்டில்ஸ் ரவி முயற்சியால் மோகனுக்கு நிறைய வாய்ப்புகளும் வந்தன.
அப்படிப்பட்ட நண்பனுக்கு உதவ மோகன் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த படம் "நான் உங்கள் ரசிகன்". ஸ்டில்ஸ் ரவி தயாரிப்பாளர் ஆனார். மனோபாலா படத்தை இயக்கினார். மோகனுடன் ராதிகா, ராஜீவ், நளினி, செந்தாமரை உள்ளிட்ட பலர் நடித்தனர். கங்கை அமரன் இசை அமைத்தார்.
கிராமத்து இளைஞன் சுப்ரமணி. இவனுக்கு நடிகை ரஞ்சனி என்றால் கொள்ளை ஆசை. அவருடைய தீவிர ரசிகன். ஒருகட்டத்தில், ரஞ்சனியின் அறிமுகம் கிடைக்கிறது. அவரிடமே வேலைக்கு சேர்கிறான். நடிகையிடம் ரசிகனாக இருப்பவன், வேலைக்காரனாகவும் ஆகிறான். இன்னும் நெருங்கிப் பார்க்க, அவள் மீது காதல் கொள்கிறான்.
ஆனால் இதெல்லாம் ரஞ்சனிக்குப் பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சைக்கோ போல் மாறி, நேசித்த ரஞ்சனியையே கொல்கிறான். அதைத் தெரிந்து கொண்ட மேனேஜரையும் பத்திரிகை புகைப்படக் கலைஞரையும் கொல்கிறான். ரஞ்சனியின் தங்கைக்கு இது தெரிய வருகிறது. அவளையும் அவளின் குழந்தையையும் கொல்லத் துணிகிறான். இறுதியில் அவர்கள் கொல்லப்பட்டார்களா, காப்பாற்றப்பட்டார்களா என்பதான் படத்தின் கதை.
மோகன் சுப்பிரமணியாகவும் ராதிகா ரஞ்சனியாகவும் நடித்திருந்தார்கள். காதல் படங்கள் மூலம் புகழ்பெற்ற மோகன் நண்பனுக்காக நெகட்டிவ் ஹீரோ கேரக்டரில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!