
பிளாஷ்பேக் : தமிழில் ஐந்து படங்களில் மட்டுமே நடித்த மாலாஸ்ரீ
ஏப் 15, 2026
Advertisement
கன்னட சினிமாவின் முன்னணி நடிகை மாலா ஸ்ரீ. 1980களில் பிசியான நடிகை. கன்னடத்தில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தமிழில் ஐந்து படங்களில் மட்டுமே நடித்துள்ளார். "இமயம், நீலமலர்கள்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் அப்போது அவரது பெயர் பேபி துர்கா. அதன் பிறகு "மனக்கணக்கு" என்ற படத்தில் நடிகை மாலா ஸ்ரீயாகவே நடித்தார்.
அதன் பிறகு "சின்ன சின்ன ஆசைகள்" படத்தில் தனது பெயரை ரசிகா என்று மாற்றி நடித்தார். "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்" என்ற படத்தில் மீண்டும் மாலா ஸ்ரீயாக பெயரை மாற்றி நடித்தார்.
என்றாலும் தமிழ் சினிமாவில் அவரால் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. அதனால் கன்னட சினிமாவிலேயே கவனம் செலுத்தினர். அதே நேரத்தில் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!