பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி
ஆக 01, 2025
Advertisement
அதிக விளம்பரத்தை விரும்பாமல் சினிமாவில் நடிப்பது தனது தொழில் என்கிற ரீதியில் எத்தனையோக கலைஞர்கள் வாழ்ந்து விட்டு போயிருக்கிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர் கே.ஆர்.இந்திராதேவி. பிரபல டப்பிங் கலைஞரான அனுராதாவின் மூத்த சகோதரி, ஜெயகீதாவின் தாய்.
1952ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தார். 14 வயதில், சென்னைக்கு வந்தார். நாடகக் குழுவில் சேர்ந்து, மேடை நாடகங்களில் நடிப்பைத் தொடங்கினார். பின்னர் அவர் திரைப்படத் துறையில் துணை நடிகையாகவும், டப்பிங் கலைஞராகவும் பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1959ல் "கண் திறந்தது" என்னும் படத்தில் ஏ.கருணாநிதிக்கு ஜோடியாக நடித்தார். ஆர்.எஸ்.மனோகர் மற்றும் மனோரமா நடித்த "கொஞ்சும் குமரி" என்னும் படத்தில் இவரும் மனோரமாவிற்கு இணையான கேரக்டரில் நடித்தார். "பெற்றால் தான் பிள்ளையா" படத்தில் நம்பியாருக்கு ஜோடியாக நடித்தார். "சுமைதாங்கி"யில் ஜெமினி கணேசனுக்கும், "ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்" படத்தில் எம்.ஆர்.ராதாவிற்கும் ஜோடியாக நடித்தார்.
கடைசியாக 2005ம் ஆண்டு "கிரிவலம்" படத்தில் நடித்தார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். 2017ம் ஆண்டு தனது 70வது வயதில் காலமானார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!