பிளாஷ்பேக் : சொல்லி அடிச்சு... ஜெயித்த இளையராஜா
பிப் 06, 2026
Advertisement
மலையாள இயக்குநர் பாசிலின் திரைப்படங்கள் எப்போதுமே சென்டிமெண்ட் காமெடியும் கலந்து இருக்கும். மலையாளத்தில் அவர் இயக்கிய படங்களில் சிலவற்றை, அவரே தமிழில் ரீமேக் செய்துள்ளார். அந்த வரிசையில் அவர் இயக்கிய படம் "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு". "என்ற மாமாட்டி குட்டியம்மைக்கு" என்கிற தலைப்பில் 1983ல் வெளியான படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்தார். படம் மலையாளத்தில் சுமாரான வரவேற்பு பெற்றது.
பாசில் எப்போதுமே இசையமைப்பாளராக இளையராஜாவைத்தான் தேர்வு செய்வார். இந்தப் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்துடன் படத்தை இளையராஜாவுக்கு போட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த இளையராஜா, "என்னால் இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்க முடியும் நானே இசையமைப்பின் அதோடு படத்தை நானே தயாரிப்பேன்" என்றார். இயக்குனர் பாசிலுக்கு உரிய சம்பளத்தையும் படத்தின் ரீமிக்ஸ் உரிமத் தொகையையும் கொடுத்துவிட்டு இளையராஜா படத்தை தானே எடுத்துக் கொண்டார்.
ஒரே குழந்தைக்கு இரண்டு தாய்கள் போட்டியிடும் இந்த கதையை தன் இசையால் தாலாட்டினார். படமும் இளையராஜா சொன்னது போன்று பெரிய வெற்றி பெற்றது. இளையராஜா தானே விரும்பி இசையமைத்த படங்களில் இதுவும் ஒன்று.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!