
பிளாஷ்பேக் : ஆந்திர எம்ஜிஆரை தெரியுமா?
எம்ஜிஆர் போன்று வாள் சண்டையில் இவர் பிரபலமானதால் இவரை "ஆந்திரா எம்ஜிஆர்" என்று அழைத்தார்கள். "கத்துல காந்தாராவ்" என்று இன்னொரு பட்டப்பெயரும் உண்டு. "கத்துல" என்றால் "வாள்வீரன்" என்று பொருள். காந்தாராவ் நடித்த நேரடி தமிழ் படம் "மந்திரி குமாரன்". இந்த படத்தையும் விட்டாலாச்சார்யாதான் இயக்கினார். காந்தாராவ் ஜோடியாக ராஜஸ்ரீ, அனுராதா நடித்தனர். இந்த படமும் தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தெலுங்கில் "மதன காம ராஜுலு கதா" என்ற பெயரில் வெளியானது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!