
பிளாஷ்பேக் : சரஸ்வதி, சச்சு ஆனது இப்படித்தான்
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த "ராணி" என்ற படத்தில் மாடி லட்சுமி நடித்தார். ஒரு நாள் அவர் சச்சுவை படப்பிப்புக்கு அழைத்துச் சென்றார். படத்தில் பானுமதி நாயகி, ஏ.எஸ்.ஏ.சாமி இயக்குனர். இவர்கள் போன நேரம் அன்று படப்பிடிப்புக்கு வரவேண்டிய ஒரு குழந்தை நட்சத்திரம் உடல்நலக்குறைவு காரணமாக வரவில்லை. உடனே நிலமையை சமாளிக்க இயக்குனர் சாமி வேடிக்கை பார்க்க வந்த சச்சுவை நடிக்க வைக்க முடிவு செய்தார்.
“அவளுக்கு சரியா பேசவே வராதுங்க” என்று மாடி லட்சுமி சொல்லி பார்த்தார். ஆனால் சாமி கேட்காமல் நடிக்க வைத்தார். இப்படித்தான் சச்சு நடிகை ஆனார். அதன்பிறகு 50க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சச்சு, பின்னர் நாயகியாகவும், காமெடி நடிகையாகவும் வலம் வந்தார்.
சச்சுவின் இயற்பெயர் சரஸ்வதி. ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அதை சுருக்கி சச்சு என்று அழைப்பாளர்கள். அன்றைக்கு சினிமாவில் ஏகப்பட்ட சரஸ்வதிகள் இருந்ததால் தன் பெயரை சச்சு என்றே வைத்துக் கொண்டார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!