
இந்த கூட்டணியை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்
ஆக 05, 2023
Advertisement
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் காவாலா பாடல் வெளியிடப்பட்டு 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்திருக்கிறது. இப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் திரைக்கு வர இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், தொடர்ந்து புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடித்த முக்கிய கேரக்டர்களின் போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்டு வரும் நிலையில், இன்று ரஜினியுடன் மோகன்லால் பேசிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை படம் வெளியிட்டுள்ளது. அதில், யாரெல்லாம் இந்த கூட்டணியை பார்க்க வெயிட்டிங் என்று ஒரு கேப்ஷனை பதிவிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!