பிரபல டிசைனர் குமார் காலமானார்
ஆக 13, 2025
Advertisement
தமிழ் சினிமாவின் முன்னணி டிசைனர் குமார். தென்னிந்திய சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இவர் போஸ்டர் மற்றும் டிசைனிங்கில் பணியாற்றியவர். 67 வயதான குமார் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார்.
கே. பாலசந்தர், பாரதிராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா, விக்ரம், எஸ்ஜே சூர்யா, தரணி உள்ளிட்ட பலருடன் இணைந்து குமார் பணியாற்றியுள்ளார். "விக்ரம்" முதல் "சபாஷ் நாயுடு" வரை கமல்ஹாசனின் படங்களுக்கு அவர் தொடர்ந்து பணியாற்றி உள்ளார். ராஜ்கமல் பிலிம்சின் ஆஸ்தான டிசைனராக பணியாற்றினார் . குமாரின் மறைவுக்கு திரை உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!