தேர்வுகள் ஆரம்பம் : தியேட்டர்களுக்கு சிக்கல்
பிப் 16, 2026
Advertisement
2026ம் ஆண்டின் துவக்க வாரங்கள் தமிழ் சினிமாவிற்கு சரியாக அமையவில்லை. மாபெரும் வெற்றி என்று எந்த ஒரு படமும் இன்னும் பெறவில்லை. கடந்த ஏழு வாரங்களில் 34 படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் "தலைவர் தம்பி தலைமையில், வித் லவ்" ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே பட்ஜெட்டை விட அதிகமாக வசூலித்து குறிப்பிடத்தக்க லாபத்தைத் தந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
கடந்த வாரம் 7 நேரடி தமிழ்ப் படங்களும், 5 ரீ ரிலீஸ் படங்களும், 2 டப்பிங் படங்களும் வெளிவந்தன. இந்த வாரம் பிப்ரவரி 20ம் தேதி குறிப்பிடும்படியான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. சில சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. “லவ் சப்ஸ்க்ரைப் ஷேர், சிவசம்போ, எம்ஜி 24” ஆகிய படங்கள் பிப்ரவரி 20ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள படங்கள். அன்று வெளியாவதாக இருந்த "தாய் கிழவி" படம் பிப்ரவரி 27ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகள் நாளை பிப்ரவரி 17 முதல் ஆரம்பமாகிறது. அடுத்த மாதம் மார்ச் 2ம் தேதி மாநில பாடத் திட்ட 12ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகளும், மார்ச் 11ம் தேதி 10ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகளும் ஆரம்பமாகின்றன. அடுத்து இதர வகுப்புகளுக்கான தேர்வுகள் என அடுத்த இரண்டு மாதங்கள் தேர்வு மாதங்களாக இருக்கும். இதனால், தியேட்டர்களுக்கு வரும் குடும்பத்தினரின் எண்ணிக்கை அடியோடு குறைந்துவிடும்.
ஏற்கெனவே முன்னணி நடிகர்களின் படங்கள் இல்லாததால் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் குறைந்து போயுள்ளது. தற்போது டி 20 உலகக் கோப்பை போட்டியும் பரபரப்பாக நடந்து வருகிறது. எனவே, அடுத்த இரண்டு மாதங்கள் வெளியாகும் படங்களுக்கும் கூட இது தேர்வுக் காலம் போலத்தான். அதன் ரிசல்ட் எப்படி வேண்டுமானாலும் இருக்கும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!