
எவிடென்ஸ் படப்பிடிப்பு நிறைவு!
ஜன 28, 2024
Advertisement
காவல் துறை உங்கள் நண்பன் படத்தின் இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கத்தில் சசிகுமார், நவீன் சந்திரா இணைந்து நடித்து வரும் படம் "எவிடென்ஸ்". இதில் கஸ்தூரி ராஜா, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வைப் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ரான் எதன் யோஹன் இசையமைக்கிறார். வித்தியாசமான ஆக்ஷன் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை மிக குறுகிய மாதங்களில் முடித்துள்ளனர். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!