மழை காரணமாக டல் முன்பதிவுகள்
டிச 01, 2023
Advertisement
2023ம் ஆண்டின் கடைசி மாதம் இன்று ஆரம்பமாகிவிட்டது. இன்று வெளியான படங்களில் நயன்தாரா நடித்துள்ள "அன்னபூரணி", ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள "பார்க்கிங்", தர்ஷன் நடித்துள்ள "நாடு" ஆகிய படங்கள் குறிப்பிடும்படியான படங்களாக அமைந்துள்ளன.
இந்தப் படங்களுக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தாலும் வசூல் ரீதியாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. படம் வெளியான இன்றைய முதல் நாளில் கூட ஒரு தியேட்டர் கூட ஹவுஸ்புல் ஆகவில்லை. மழையின் காரணமாக மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவதைத் தவிர்த்து வருகிறார்கள். பொதுவாக பகல் காட்சிகள் காலியாக இருந்தால் கூட இரவுக் காட்சிகளுக்கு ஓரளவிற்குக் கூட்டம் வரும். ஆனால், அப்படி கூட இந்தப் படங்களுக்கு அமையவில்லை.
நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை நாட்கள்தான். ஆனால், அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கடும் மழை வரக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால், இன்று வெளியாகியுள்ள படங்களின் வசூல் மிகவும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!