கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார்
ஏப் 13, 2021
Advertisement
மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, இந்தி மற்றும் சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் இதன் இரண்டாம் பாகமான "திரிஷ்யம் 2" வெளியாகி முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே தெலுங்கில் திரிஷ்யம் ரீமேக்கில் நடித்த வெங்கடேஷ், உடனடியாக திரிஷ்யம் இரண்டாம் பாகத்தை துவங்கி நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கன்னடத்திலும் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் த்ரிஷ்யா-2 என்கிற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதன் முதல் பாகத்தில் இணைந்து பணியாற்றிய இயக்குனர் பி.வாசு மற்றும் நடிகர் ரவிச்சந்திரன் கூட்டணி இந்தப் படத்திலும் அப்படியே தொடர்கிறது. முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த, நவ்யா நாயர், பிரபு, ஆஷா சரத் ஆகியோரும் இந்த படத்தில் இடம் பெறுகின்றனர்

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!